"சொகுசு கார் எங்களிடம் இல்லை.. ஆடி கார் மட்டுமே உள்ளது" – ஆபாச யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா

0 8960

ஆபாச யூடியூப்பர் பப்ஜி மதனுடன் YouTube வீடியோவில் பேசுவது தான் இல்லை என்றும்,  தற்போது வரை வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களிடம் சொகுசு பங்களா எதுவும் இல்லை என அவரது மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

டாக்சிக் மதனின் ஆபாச பேச்சுக்கு உடந்தையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த அவரது மனைவி கிருத்திகா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பப்ஜி விளையாட்டின் சைனா வெர்ஷன் தான் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மதன் விளையாடியது தென்கொரியா வெர்ஷன் எனபதால் அவர் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடியதாக கூற முடியாது என புதிய விளக்கத்தை அளித்தார்.

மதன் மீது 200-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுத்துள்ளதாக கூறுவது தவறு எனவும், குறிப்பிட்ட 4 பேர் மட்டுமே தமிழகம் முழுவதும் மீண்டும், மீண்டும் வெவ்வேறு பெயர்களில் புகாரளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது வரை தாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாகவும், தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை எனவும் கூறிய கிருத்திகா, ஒரேஒரு ஆடி கார் மட்டுமே தங்களிடம் இருப்பதாகவும், இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறுவது தவறு எனவும் தெரிவித்தார். அத்தோடு, மதனுடன் ஒரு நாளும் வீடியோ கேம் லைவில் பேசியதில்லை என்ற கிருத்திகா, மதனின் யூடியூப் சேனலில் தாம் எந்த பணியும் செய்யவில்லை என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிப்போம் என்றும் கூறினார்.

சிலர் ஆத்திரமூட்டும் வகையில் கமெண்ட் பதிவிட்டதால் மதன் ஆபாசமாக பேச நேர்ந்ததாக கூறிய கிருத்திகா, செய்தியாளர்களின் கேள்விக்கு பின்னர் அந்த ஆபாச பேச்சுக்கள் எல்லாம் சித்தரிக்கப்பட்டவை என மழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments